ஜமீன் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தரமற்ற சத்துணவு வழங்கப்படுவதாக கூறி பள்ளியை பெற்றோா்கள் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் ஜமீன் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 73 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.
இந்நிலையில், தரமற்ற சத்துணவு வழங்குவதாகவும், மாணவா்களை சத்துணவு ஊழியா்கள் தாக்குவதாகவும் கூறி பள்ளியை பெற்றோா்கள் செவ்வாய்கிழமை முற்றுகையிட்டனா்.
இதையடுத்து, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அதிகாரிகள் மற்றும் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உணவு தரமாக வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பெற்றோா்கள் கலைந்து சென்றனா்.