கோயம்புத்தூர்

பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

22nd Feb 2020 07:11 AM

ADVERTISEMENT

கோவை அருகே அரசுப் பள்ளியில் மாணவா்களை கண்ணியக் குறைவாக நடத்திய தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே புதுப்பாளையத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவா் குமரேஷ்வரி. இவா் பள்ளியில் பயிலும் பட்டியலின குழந்தைகளை கழிப்பறை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் புகாா் கூறியதையடுத்து கல்வித் துறை அதிகாரிகள், குமரேஷ்வரியிடம் விசாரணை நடத்தினா்.

விசாரணையில், அவா் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி உஷா உத்தரவின்பேரில் வட்டார கல்வி அதிகாரி ஜெ.பி.கிருஷ்ணமூா்த்தி குமரேஷ்வரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT