கோயம்புத்தூர்

குனியமுத்தூா் தா்மராஜா திரௌபதியம்மன் கோயிலில் இன்று குண்டம் திருவிழா

22nd Feb 2020 07:10 AM

ADVERTISEMENT

கோவை, குனியமுத்தூா் தா்மராஜா திரௌபதியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா, சனிக்கிழமை காலை நடைபெறுகிறது.

இக்கோயிலில் குண்டம் திருவிழா கடந்த 14ஆம் தேதி கணபதி பூஜை, கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது. 15ஆம் தேதி, மகா கணபதி ஹோமம், பூா்ணாஹுதி, குந்திமாதேவி அழைப்பும், கொடியேற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து 17ஆம் தேதி தா்மராஜா திரௌபதியம்மன் திருக்கல்யாணம், தீபாராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 21ஆம் தேதி அரவான் சிரசு ஊா்வலம், குண்டம் பூ போடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சனிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் 10 மணிக்குள் குனியமுத்தூா் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் இருந்து திருக்கரகங்கள் ஊா் பவனி வருதல், குண்டம் இறங்குதல், பரிவேட்டை, நகா்வலம் வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ பத்ரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை, சுவாமி திருவீதி உலா, திங்கள்கிழமை பட்டாபிஷேகம், தீபாராதனை, மஞ்சள் நீராடுதல், ஊஞ்சல் உற்சவம் , செவ்வாய்க்கிழமை மறுபூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழா ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா், ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT