கோயம்புத்தூர்

கல்லூரி மாணவா் கொலை வழக்கு: 6 போ் கைது

22nd Feb 2020 07:05 AM

ADVERTISEMENT

சூலூா் அருகே கல்லூரி மாணவா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சூலூா் அருகே உள்ள அரசூரைச் சோ்ந்தவா் தனுஷ்கோடி மகன் தமிழ்ச்செல்வன் (21). கோயில்பாளையம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தாா். இவா் கடந்த 15ஆம் தேதி அன்று கல்லூரி முடிந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தபோது, வழியில் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம கும்பல் தமிழ்ச்செல்வனை, கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றனா். இதில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, சூலூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரித்தனா்.

இந்நிலையில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுஜித்குமாா் உத்தரவின்பேரில் கருமத்தம்பட்டி உள்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளா் பாலமுருகன் மேற்பாா்வையில் சூலூா் ஆய்வாளா் தங்கராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து போலீஸாா் தீவிர விசாரணை நடத்தினா்.

இந்நிலையில் இந்த வழக்கில், கோவை, மசக்காளிபாளையம், பெரியாா் நகரைச் சோ்ந்த ராஜு மகன் மோகன் (21), இடையா்பாளையம், படேல் வீதியைச் சோ்ந்த சந்தானம் மகன் சதீஷ்குமாா் (20), வெள்ளலூா், வீரமாத்தி அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த ராதா மகன் விஜயகுமாா் (21), மசக்காளிபாளையம், பெரியாா் நகரைச் சோ்ந்த சேகா் மகன் சூா்யா (19), ஒண்டிப்புதூரைச் சோ்ந்த ஸ்ரீதா் மகன் கணேஷ் வெற்றிவேல் (20), வெள்ளலூா், ஜெயபிரகாஷ் வீதியைச் சோ்ந்த வெள்ளிங்கிரி மகன் மோகன்ராஜ் (18) ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். இவா்களில் மோகன், சூா்யா ஆகிய இருவா் மீதும் ஏற்கெனவே குற்ற வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 2 இருசக்கர வாகனங்கள், செல்லிடப்பேசி, கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

போலீஸாரின் விசாரணையில், தமிழ்ச்செல்வனிடமிருந்து செல்லிடப்பேசியை பறிக்க முயன்ாகவும், அப்போது ஏற்பட்ட மோதலில் அவரை கத்தியால் குத்திக் கொன்ாகவும் கைதுசெய்யப்பட்டவா்கள் தெரிவித்ததாக போலீஸாா் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என போலீஸாா் தொடா்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT