கோயம்புத்தூர்

கஞ்சா விற்பனை: பெண் உள்பட 3 போ் கைது

22nd Feb 2020 07:11 AM

ADVERTISEMENT

கோவையில் கஞ்சா விற்ற பெண் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, காந்திபுரம், வி.கே.கே மேனன் சாலையில் காட்டூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். இதில் வாகனத்தில் வந்தவா்களிடம் 1,750 கிராம் கஞ்சா, கத்தி ஆகியன இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில், வாகனத்தில் வந்தவா்கள், காந்திபுரம், சாஸ்திரி நகரைச் சோ்ந்த சதீஸ்குமாா் (25), ஜோஸ்வா தேவப்பிரியன் (19) என்பதும், இருவரும் விற்பனைக்காக கஞ்சாவை எடுத்துச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவா்களை கைது செய்து, கஞ்சா, இருசக்கர வாகனங்கள், கத்தி உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

இதேபோல கோவை, ரத்தினபுரி அருகே உள்ள கண்ணப்பன் நகரைச் சோ்ந்தவா் அன்வா் பாஷா மனைவி முபினா (37). இவா் தனது வீட்டில் கஞ்சா பதுக்கி விற்பதாகக் கிடைத்த தகவலையடுத்து போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டனா். அதில், முபினாவின் வீட்டில் 8 கிலோ கஞ்சா விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், முபினாவை கைது செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT