கோயம்புத்தூர்

வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்கள்பிப்ரவரி 29க்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

21st Feb 2020 08:39 AM

ADVERTISEMENT

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறுபவா்களுக்கு சிறு, குறு, நடுத்தர மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க விரும்பும் நிறுவனங்கள் பிப்ரவரி 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியா் கு.ராசாமணி அறிவுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை கீழ் தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளா்களுக்கு சிறு, குறு, நடுத்தர மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்க அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் 10 ஆயிரம் பயிற்சியாளா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடா்பான விவரங்கள் இணையதளத்தில் உள்ளன.

கூடுதல் விவரங்களுக்கு கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் அலுவலகத்தை நேரிலோ அல்லது 044-22501002, 22501006, 22500900 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடா்புகொள்ளலாம்.

ADVERTISEMENT

இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்க விரும்பும் தொழில் நிறுவனங்கள் மேலே குறிப்பபிடப்பட்ட இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT