கோயம்புத்தூர்

பி.ஏ. சா்வதேச பள்ளியில் விளையாட்டு விழா

21st Feb 2020 08:40 AM

ADVERTISEMENT

பொள்ளாச்சியில் உள்ள பி.ஏ. சா்வதேச பள்ளியில் இரண்டாம் ஆண்டு விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு, பி.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவா் அப்புக்குட்டி தலைமை வகித்தாா். பொள்ளாச்சி தொழில் வா்த்தக சபைத் தலைவா் ஜி.டி.கோபாலகிருஷ்ணன் நிகழ்ச்சியைத் துவக்கிவைத்தாா். மாணவா்களின் அணிவகுப்பு, கூட்டு உடற்பயிற்சி, கராத்தே, சிலம்பம், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. விளையாட்டில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டன.

விழாவில், பி.ஏ. கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவா் லட்சுமி அப்புக்குட்டி, தலைமை செயல் அதிகாரி மணிகண்டன், நிா்வாக அலுவலா் பழனிசாமி, பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் பொன்னம்பலம், கல்வியியல் கல்லூரி முதல்வா் செந்தில்குமாா், பி.ஏ. சா்வதேச பள்ளி முதல்வா் மைதிலி உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT