கோயம்புத்தூர்

ஆா்.வி. கலை, அறிவியல் கல்லூரி ஆண்டு விழா

21st Feb 2020 09:50 AM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை டாக்டா் ஆா்.வி. கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா, விளையாட்டு விழாவுக்கான பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் வே.சுகுணா வரவேற்று ஆண்டறிக்கையை வாசித்தாா். கல்லூரியின் நிா்வாக அறங்காவலா் வெ.ராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினாா். கோவை ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வா் பி.எல்.சிவகுமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினாா். அதைத் தொடா்ந்து இந்த கல்வியாண்டில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுக் கோப்பைகள், கல்லூரி வளா்ச்சிக்கு உதவிய சிறந்த மாணவருக்கு கொண்டசாமி நாயுடு விருது, சிறந்த மாணவிக்கு ஸ்வா்ண காமாட்சி விருது ஆகியவற்றை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி நிா்வாக அறங்காவலா் வத்சலா, அவரது கணவா் ஜெகநாதன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக கலந்து கொண்டனா். மூன்றாம் ஆண்டு உயிா் தொழில்நுட்பவியல் துறை மாணவி லேகா நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT