கோயம்புத்தூர்

குறிச்சி குளத்தில் மூதாட்டி சடலம் மீட்பு

15th Feb 2020 06:29 AM

ADVERTISEMENT

கோவை குறிச்சி குளத்தில் இருந்து அடையாளம் தெரியாத மூதாட்டியின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

கோவை, குறிச்சி பொங்காளியம்மன் கோயில் அருகே உள்ள குளத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மிதப்பதாக போத்தனூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. பின்னா் தீயணைப்புத் துறையினரின் உதவியோடு குளத்தில் மிதந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

கடந்த 15 நாள்களில் குறிச்சி குளத்தில் மூழ்கி 4 போ் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT