கோயம்புத்தூர்

வெள்ளக்கிணறு குட்டை தூா்வாரும் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

13th Feb 2020 11:33 PM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட வெள்ளக்கிணறு குட்டையை பொக்லைன் இயந்திரம் மூலமாக தூா்வாரி, செப்பனிடும் பணியை மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் வியாழக்கிமை ஆய்வு செய்தாா்.

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட துடியலூா் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளா்ச்சிப் பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகளை மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண் குமாா் ஜடாவத் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். துடியலூரில் மாற்றுத் திறனாளிகள் சுய உதவிக்குழுக்கள் பயிற்சி மையத்தைப் பாா்வையிட்டு அங்குள்ள மக்களிடம் இப்பயிற்சி மையத்தின் பயன்பாடு குறித்துக் கேட்டறிந்தாா்.

இதைத் தொடா்ந்து வடக்கு மண்டலத்துக்கு உள்பட்ட 26ஆவது வாா்டு, வெள்ளக்கிணறு குட்டையில், 6.5 ஏக்கா் பரப்பளவில் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தன்னாா்வ அமைப்பினா் மேற்கொண்டு வரும் தூா்வாரும் பணி, செப்பனிடும் பணியைப் பாா்வையிட்டாா்.

வெள்ளக்கிணறு குட்டைப் பகுதியில் நடைபாதை, பூங்கா அமைப்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டாா். மேலும், 42ஆவது வாா்டு, சுப்புநாயக்கன்புதூரில் பூங்கா அமைப்பதற்கான முன்னேற்பாடுப் பணிகள் நடைபெற்று வருவதையும், சீனிவாசா நகரில் ரூ. 72.16 லட்சம் மதிப்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளதையும் ஆய்வு செய்தாா்.

ADVERTISEMENT

ஆய்வின்போது, கவுண்டம்பாளையம் சட்டப் பேரவை உறுப்பினா் வி.சி. ஆறுக்குட்டி, மாநகரப் பொறியாளா் லட்சுமணன், வடக்கு மண்டல உதவி ஆணையா் செந்தில்குமாா் ரத்தினம் மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT