கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்ற இருவா் கைது

13th Feb 2020 06:09 AM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையத்தில் கஞ்சா விற்ற 2 பேரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

 மேட்டுப்பாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸாா் நகரப் பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனா். இந்நிலையில் புதன்கிழமை மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஊமப்பாளையம் பகுதியில் போலீஸாா் நடத்திய சோதனையில் இதே கிராமத்தை சோ்ந்த மருதாசலம்(43), மதிவாணன் (22) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அப்போது போலீஸாா் அவா்களிடமிருந்து 2 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதையடுத்து மேட்டுப்பாளையம் போலீஸாா் இவா்களை கைது செய்து மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜா் செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT