கோயம்புத்தூர்

பயனீா் கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு

13th Feb 2020 11:20 PM

ADVERTISEMENT

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள பயனீா் கலை அறிவியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பம் தொடா்பான தேசிய அளவிலான கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரியின் கணினி அறிவியல் துறை, கணினி பயன்பாட்டுத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கை கல்லூரியின் முதல்வா் எஸ்.மகேந்திரன் தலைமை வகித்துத் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து ஆய்வுக் கட்டுரைகள் சமா்ப்பித்தல், குறும்படங்கள் தயாரிப்பு, நிரல் பிழை திருத்தம், போஸ்டா் டிசைன்ஸ், பென்சில் டிராயிங் போன்ற போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவ, மாணவியா் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினா்.

இதில், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. தொடா்ந்து நடந்த நிறைவு விழாவுக்கு கல்லூரியின் துணை முதல்வா் பி.ராஜப்பன் முன்னிலை வகித்தாா். கணினி அறிவியல் துறை மாணவி டி.நந்தினி வரவேற்றாா். ஜி.ஆா்.ஜி.கல்வியியல் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியா் கே.பீமன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினாா். கணினி பயன்பாட்டுத் துறை மாணவி ஏ.வைஷ்ணவி நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT