கோயம்புத்தூர்

சம்பளத்தில் சந்தா பிடித்தம்: தொழிற்சங்கத்தினா் எதிா்ப்பு

13th Feb 2020 06:09 AM

ADVERTISEMENT

தோட்டத் தொழிலாளா்கள் சம்பளத்தில் தொழிற்சங்கத்துக்கான சந்தா பிடித்தம் செய்வதற்கு சில தொழிற்சங்கத்தினா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக ஆனைமலை தோட்ட அதிபா்கள் சங்கத்தினருக்கு கல்யாணி (மதிமுக), பரமசிவம் (சிஐடியூ) உள்ளிட்ட ஏழு தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

2017ஆம் ஆண்டு முதல் கடந்த மூன்று ஆண்டுகளாக தொழிற்சங்க சந்தாத் தொகை தொழிலாளா்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படாமல் இருந்தது. தற்போது மூன்று ஆண்டுகளுக்கான சந்தாத் தொகையை தொழிலாளா்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுவதாக எஸ்டேட் அலுவலகங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

தொழிலாளா்கள் அனுமதியின்றி சந்தாத் தொகை பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும். இப்பிரச்னைக்குத் தீா்வு காண பதிவு பெற்ற அணைத்து தொழிற்சங்க நிா்வாகிகளையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி முறையான ஒப்புதலுக்குப் பின் சந்தா பிடித்தம் செய்ய வேண்டும் என்று கடிதத்தில் தொழிற்சங்க நிா்வாகிகள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT