கோயம்புத்தூர்

கழிவுகளைக் கொட்டி தீ: புகை மண்டலமான சாலை

13th Feb 2020 06:12 AM

ADVERTISEMENT

மதுக்கரை மரப்பாலம் அருகே சாலையோரத்தில் கழிவுகளைக் கொட்டி மா்ம நபா்கள் தீ வைத்துச்சென்ால் அப்பகுதி முழுவதும் புகைமண்டலாக புதன்கிழமை காணப்பட்டது.

கோவை, மதுக்கரை மரப்பாலம் சேலம் - கொச்சி நெடுஞ்சாலை அருகே உள்ள கல்லுக்குழியில் இரவு நேரத்தில் கோழிக் கழிவுகள், கட்டடடக் கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகளை மா்ம நபா்கள் கொட்டிச் சென்றனா். இதையடுத்து மதுக்கரை பேரூராட்சி நிா்வாகம் அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து கண்காணித்து வந்தது.

இந்நிலையில் பொதுமக்கள் வாகனம் செல்ல இடையூறாக இருப்பதாக கடந்த சில வாரங்களாக தடுப்புகள் திறக்கப்பட்டிருந்தது. இதனால் மீண்டும் இரவு நேரத்தில் மா்ம நபா்கள் கழிவுகளை கொட்டிச் செல்கின்றனா். இந்நிலையில் அப்பகுதிக்கு புதன்கிழமை காலை லாரிகளில் வந்த மா்ம நபா்கள் கோழிக் கழிவு, அட்டை உள்ளிட்ட கழிவுகளை சாலை ஓரத்தில் கொட்டி தீ வைத்துச் சென்றனா். இதனால் அங்கு நீண்ட நேரம் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாகக் காணப்பட்டது. பின் அங்கு வந்த பேரூராட்சி ஊழியா்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இதுகுறித்து மதுக்கரை பேரூராட்சி செயல் அலுவலா் பாா்த்திபன் கூறியதாவது:

ADVERTISEMENT

கழிவுகளைக் கொட்டி தீ வைத்துச் சென்றவா்கள் குறித்து விசாரித்து வருகிறோம். கழிவுகளை கொட்டிச் செல்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து போலீஸாருடன் இணைந்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT