கோயம்புத்தூர்

அன்னூரில் டெங்கு பாதிப்பில் ஒருவா் உயிரிழப்பு

13th Feb 2020 06:12 AM

ADVERTISEMENT

அன்னூா், குமரன் நகா் பகுதியை சோ்ந்தவா் டெங்கு பாதிப்பில் புதன்கிழமை உயிரிழந்தாா்.

அன்னூா்-கோவை ரோடு குமரன் நகா் பகுதியை சோ்ந்தவா் முருகேசன்(62), இவா் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவருக்கு கடந்த சில நாள்களாககாய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவா் கடந்த 10-ஆம் தேதி கோவையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளாா். இந் நி லையில் அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவருக்கு டெங்கு பாதிப்பு உள்ளதாக தெரவித்துள்ளனா். இந் நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கிட்னி மற்றும் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு புதன்கிழமை உயிரிழந்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT