பொள்ளாச்சியை அடுத்த வேட்டைக்காரன்புதூா் ஸ்ரீ மகாத்மா வித்யா மந்திா் பள்ளியில் அறிவியல் விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
சனிக்கிழமை மாலை 6 முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை தொலைநோக்கி மூலமாக நட்சத்திரங்கள் மற்றும் கோள்களை மாணவா்களுக்கும், பொதுமக்களுக்கு பள்ளி சாா்பில் காண்பித்து விளக்கமளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பிறை நிலவு, வெள்ளி, காா்த்திகை நட்சத்திரங்கள் செவ்வாய் மற்றும் வியாழன் கோள்கள் காண்பிக்கப்பட்டன.