குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து கோவையில் இஸ்லாமியா்கள் தங்கள் வீடுகள் முன்பு வாசகங்களைப் பதிவிட்டுள்ளனா்.
கோவையில் இஸ்லாமியா்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான சாரமேடு, கரும்புக்கடை, உக்கடம், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியா்கள் தங்கள் வீடுகளில் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு உள்ளிட்டவற்றுக்கு எதிா்ப்புத் தெரிவிக்கும் வகையில் வாசகங்களை சுவரில் பதிவிட்டுள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அரசு இதற்கு செவி சாய்க்கவில்லை. எனவே, போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் எங்கள் வீட்டின் முன்பு இதுபோன்ற வாசகங்களை பதிவிட்டுள்ளோம் என்றனா்.