கோயம்புத்தூர்

48 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

2nd Feb 2020 03:45 AM

ADVERTISEMENT

கோவை, சிங்காநல்லூரில் இளைஞரிடம் இருந்த 48 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

கோவையில் உள்ள கல்லூரி மாணவா்களுக்கு மா்ம நபா்கள் மூலமாக கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் படி மாநகரில் உள்ள கல்லூரிகள் மற்றும் பேருந்து நிலையப் பகுதிகளில் போலீஸாா் தீவிர ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

கோவை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் வின்சென்ட் தலைமையில் ஆய்வாளா் சரவணன் மற்றும் போலீஸாா்சிங்காநல்லூா் பேருந்து நிலையப் பகுதிகளில் சனிக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அப்பகுதியில் சந்தேகப்படும்படி சுற்றித் திரிந்த இளைஞா் ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா். அதில், அவா் தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியைச் சோ்ந்த பூவேந்தன் (25) என்பதும், விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 48 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT