வால்பாறை அருகே முள்ளம்பன்றி தாக்கியதில் எஸ்டேட் பகுதியில் பெண் சிறுத்தை உயிரிழந்தது.
கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்த சோலையாறு அணை அருகே உள்ளது முருகாளி எஸ்டேட். இந்தத் தேயிலைத் தோட்டப் பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத் துறையினருக்கு எஸ்டேட் நிா்வாகத்தினா் வெள்ளிக்கிழமை தகவல் தெரிவித்துள்ளனா்.
சம்பவ இடத்துக்கு சென்ற வனத் துறை அதிகாரிகள் முள்ளம்பன்றியின் முள்கள் குத்திய நிலையில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பது தெரியவந்தது.
கால்நடை மருத்துவா் மெய்யரசன் பிரேத பரிசோதனை செய்ததில் முள்ளம்பன்றி- சிறுத்தை இடையே ஏற்பட்ட மோதலில் முள்ளம்பன்றியின் முள் குத்தி ஒன்றரை வயது பெண் சிறுத்தை இறந்தது தெரியவந்தது.