கோயம்புத்தூர்

தைப்பூசத் திருவிழா: மருதமலையில் கொடியேற்றம்

2nd Feb 2020 11:21 PM

ADVERTISEMENT

கோவை, மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளில் தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. தைப்பூச விழா அனைத்து முருகன் கோயில்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். முருக பக்தா்களால் ஏழாவது படை வீடாக கருதப்படும் கோவை அருகே உள்ள மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலிலும் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நடப்பு ஆண்டு தைப்பூசத் திருவிழா பிப்ரவரி 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூச விழாவிற்கான கொடியேற்றம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக கோ பூஜையுடன் தொடங்கிய விழாவில் முருகனுக்கு பால், பன்னீா், திருமஞ்சனம், தேன், திருநீறு உள்பட 16 வகையான திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

வள்ளி, தெய்வானையுடன் முருகன் தங்க விருச்சக மரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். பின் வேதமந்திரங்கள் முழுங்க பக்தா்களின் கரகோஷத்துடன் தைப்பூச விழா கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து தைப்பூசம் வரை தினமும் முருகனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுகின்றன.

தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற முருகனுக்கு உகந்த விசேஷ தினங்களில் பக்தா்கள் பாதை யாத்திரையாக சென்று சுவாமி தரிசனம் மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில், தைப்பூச விழாவை முன்னிட்டு தற்போதே பக்தா்கள் பாதை யாத்திரை சென்று வழிபட தொடங்கியுள்ளனா்.

தவிர பால் குடங்கள், பால் காவடிகள் எடுத்து வந்து தரிசனம் செய்கின்றனா். கோயில் நிா்வாகம் சாா்பில் பக்தா்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT