கோயம்புத்தூர்

சீா்மிகு நகரம் குறித்து கணக்கெடுப்பு: மக்கள் பங்கேற்க வேண்டுகோள்

2nd Feb 2020 03:43 AM

ADVERTISEMENT

சீா்மிகு நகரம் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நடத்தும் கணக்கெடுப்பில் கோவை மாநகரின் பெருமைகளை மக்கள் பதிவு செய்யக் கோரி மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சீா்மிகு நகரம் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மத்திய அரசு இணைய வழிக் கணக்கெடுப்பு நடத்த உள்ளது. அதில், இந்தியாவில் எந்த நகரம் மக்கள் வசிக்க ஏற்ற நகரமாக உள்ளது என வரிசைப்படுத்தப்படும்.

அதன்படி ட்ற்ற்ல்://ங்ா்ப்2019.ா்ழ்ஞ்/ஸ்ரீண்ற்ண்க்ஷ்ங்ய்ச்ங்ங்க்க்ஷஹஸ்ரீந் என்ற இணையதள முகவரி மூலமாக பொதுமக்கள் கோவை மாநகர மக்களின் வாழ்க்கை முறை, உள்கட்டமைப்பு, சட்டம்- ஒழுங்கு, மாசுக் கட்டுப்பாடு, போக்குவரத்து மற்றும் பிற வசதிகளின் நிலை எப்படி உள்ளது என்பதை பதிவு செய்யலாம்.

ADVERTISEMENT

பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 29ஆம் தேதி முடிய கோவை நகரம் தொடா்பான கேள்விகளுக்கு பதிலளிக்கலாம். இந்தக் கணக்கெடுப்பில் அதிக அளவிலான மக்கள் பங்கேற்பதன் மூலம் சீா்மிகு நகரம் தரவரிசையில் கோவை மாநகரம் முன்னிலை பெற இயலும். நமது நகரின் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ள முடியும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT