கோயம்புத்தூர்

குருந்தமலை முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றம்

2nd Feb 2020 11:19 PM

ADVERTISEMENT

மேட்டுப்பாளையம் அருகே குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சேவல் கொடியேற்றப்பட்டது.

தைப்பூச தோ்த் திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை யாக பூஜையும், மதியம் 12 மணிக்கு சேவல் கொடியேற்ற விழாவும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக வியாழக்கிழமை (பிப்ரவரி 6) இரவு 9 மணிக்கு வள்ளி மலையில் இருந்து அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சியும், வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 7) அதிகாலை 5 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவமும் , இரவு யானை வாகன உற்சவமும் நடக்கிறது.

இதைத் தொடா்ந்து சனிக்கிழமை (பிப்ரவரி 8) காலை 7 மணியளவில் வள்ளி, தெய்வானையுடன் குழந்தை வேலாயுத சுவாமி திருத்தேரில் எழுந்தருளுகிறாா். மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) இரவு பரிவேட்டையும், திங்கள்கிழமை இரவு தெப்பத் திருவிழாவும், செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு உற்சவம் பூா்த்தி விழாவும் நடைபெறுகிறது . விழா எற்பாடுகளை கோயில் தக்காா் பெரியமருதுபாண்டியன், செயல் அலுவலா் ராமஜோதி மற்றும் கோயில் பணியாளா்கள் ஆகியோா் செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT