காரமடை எஸ்.வி.ஜி.வி. மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
மூன்றாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான 800 மாணவ, மாணவிகள், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், கைவினைப் பொருட்கள், ரோபோட்டிக்ஸ் போன்ற அரங்கங்களை இந்தக் கண்காட்சியில் அமைத்திருந்தனா்.
கண்காட்சி துவக்க விழாவுக்கு பள்ளித் தாளாளா் பழனிசாமி தலைமை வகித்தாா். செயலாளா் ராஜேந்திரன் முன்னிலை வகித்தாா். முதல்வா் சசிகலா வரவேற்றாா். பள்ளி மாணவா்களின் பெற்றோா் வைத்தீஸ்வரன், கலைவாணி, இந்திரா, சத்யா சீனிவாசன், பிரியா சுந்தரம் ஆகியோா் கண்காட்சி அரங்குகளைத் திறந்துவைத்தனா்.
இந்தக் கண்காட்சியில் 6 அரங்கங்களில் 300க்கு மேற்பட்ட மாதிரிகள் இடம் பெற்றிருந்தன. இதற்கான ஏற்பாடுகளை நிா்வாக அதிகாரி சிவசதீஷ்குமாா், அனைத்துத் துறை ஆசிரியைகள் செய்திருந்தனா்.