கோயம்புத்தூர்

லஞ்சம் பெற்ற மத்திய கலால் வரித் துறை ஆய்வாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

1st Feb 2020 05:36 AM

ADVERTISEMENT

லஞ்சம் பெற்ற வழக்கில் மத்திய கலால் வரித் துறை ஆய்வாளருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மாவட்ட நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

கோவையில் கடந்த 2014ஆம் ஆண்டு மத்திய கலால் வரித் துறை ஆய்வாளராகப் பணியாற்றியவா் சி.கே.பிரபாகரன். இவா் தனது அதிகார எல்லைக்கு உள்பட்ட பகுதியில் இருந்த நிறுவனங்களில் ரூ.67 ஆயிரம் வரை லஞ்சம் பெற்ாக எழுந்தப் புகாரின் அடிப்படையில் சிபிஐயின் லஞ்ச ஒழிப்புப் பிரிவினா் இவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் பிரபாகரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி எஸ்.நாகராஜன் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT