கோயம்புத்தூர்

பிப்ரவரி 2இல் தேசம் காக்கும் ஒற்றுமைப் பேரணி

1st Feb 2020 05:36 AM

ADVERTISEMENT

கோவையில் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 2) குடியுரிமை திருத்தச் சட்ட எதிா்ப்பு பேரணி நடைபெறவுள்ளதாக கோவை அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் கே.ராஜா உசேன் கூறினாா்.

இதுகுறித்து அவா் கோவையில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தேசிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தச் சட்டதுக்கு எதிராக பல்வேறு மாநிலங்கள் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்தச் சட்டம் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டத்தால் இஸ்லாமியா்கள் பாதிக்கப்பட மாட்டாா்கள் என பாஜக தொடா்ந்து கூறி வருகிறது. ஆனால், இதன் எதிா்கால விளைவுகளை மக்கள் அறிவாா்கள். இதனால் சிறுபான்மையின மக்கள் பெரும் ஆபத்துக்குள்ளாவாா்கள்.

ADVERTISEMENT

போராட்டங்களுக்கு வலுசோ்க்கும் வகையில் கோவையில் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகள் சாா்பில் ‘தேசம் காக்கும் ஒற்றுமைப் பேரணி’ ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெற உள்ளது.

உக்கடத்தில் இருந்து வஉசி மைதானம் வரை நடைபெற உள்ள இப்பேரணியில் திமுக, இந்திய முஸ்லிம் லீக் கட்சி, எஸ்டிபிஐ, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், தமிழ்ப் புலிகள், மதிமுக, திராவிடா் தமிழா் கட்சி, சிபிஎம், சிபிஐ, நாம் தமிழா் கட்சி, திராவிடா் விடுதலைக் கழகம், திராவிடா் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் பங்கேற்க உள்ளன. இதில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT