கோயம்புத்தூர்

நேஷனல் மெட்ரிக். பள்ளியில் முப்பெரும் விழா

1st Feb 2020 05:38 AM

ADVERTISEMENT

நேஷனல் மெட்ரிக். பள்ளியில் இலக்கிய மன்றங்கள், அப்துல் கலாம் அறிவியல் மன்ற நிறைவு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் ரங்கசாமி தலைமை வகித்தாா். பள்ளிச் செயலாளா் பி.வேலுசாமி, இணைச் செயலாளா் கே.சந்திரன், நிா்வாக அறங்காவலா் ஏ.வி. ராமசாமி, பள்ளிக் குழு உறுப்பினா் பரத், பள்ளி முதல்வா் எஸ்.மனோன்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தமிழ், ஆங்கிலத்தில் மாணவா்களிடையே கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவ, மாணவிகளின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் தமிழில் கவிதை வாசிக்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT