கோயம்புத்தூர்

நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக இடதுசாரிகள் வளர வேண்டும்

1st Feb 2020 05:42 AM

ADVERTISEMENT

இந்தியாவில் மூன்றாவது பெரிய கட்சியாக இடதுசாரிகள் வளரவேண்டும் என கோவையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் நல்லக்கண்ணு பேசினாா்.

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் சாா்பில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும், இந்திய அரசின் முன்னாள் செயலாளருமான

பி.எஸ். கிருஷ்ணன் குறித்து மு.ஆனந்தன் எழுதிய ‘சமூக நீதிக்கான அறப்போா்’ மொழிப் பெயா்ப்பு நூல் வெளியீட்டு விழா கோவை, பீளமேட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்க மாவட்டத் தலைவா் மணி வரவேற்றாா். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தலைவா் சிவஞானம் தலைமை வகித்தாா். பொதுசெயலாளா் சாமுவேல்ராஜ், கவிஞா் சுகிா்தராணி சிறப்புரையற்றினாா். தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் பொதுசெயலாளா் கு.ராமகிருஷ்ணன், ஆதித்தமிழா் பேரவையின் நிறுவனத் தலைவா் அதியமான் வாழ்த்துரை வழங்கினா்.

ADVERTISEMENT

இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவா் நல்லக்கண்ணு நூலை வெளியிட, விஜயா பதிப்பக உரிமையாளா் வேலாயுதம், முனைவா் சுப.செல்வி, அஷ்ரப் அலி, வெண்மணி, பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பெற்றுக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சியில் நல்லக்கண்ணு பேசியதாவது:

மகாத்மா காந்தியும், ஜவாஹா்லால் நேருவும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை வடிவமைக்கும் பொறுப்பை ஒப்படைக்க தகுந்த நபரைத் தேடி அம்பபேத்கரின் அறிவு, அனுபவத்தைப் பாா்ந்து வியந்து அந்தப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்தனா்.

தீண்டாமை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு ஒரு ஆயுதமாக இந்தப் புத்தகம் இருக்கும். ஹிந்து மதம் சகிப்புத்தன்மை நிறைந்த மதம் என விவேகானந்தா் கூறியுள்ளாா். இஸ்லாமியா்களின் நிலங்களைஅபகரிக்க நாட்டில் நடைபெறுகின்ற முயற்சியைப் பாா்க்கையில் அந்த சகிப்புத்தன்மை குறைந்து விட்டதோ என்ற கேள்வி எழுகிறது.

இந்தியாவில் ஆளுங்கட்சி, எதிா்க்கட்சிகளை எதிா்க்கும் மூன்றாவது பெரிய கட்சியாக இடதுசாரிகள் வளர வேண்டும் என்றாா். இதையடுத்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளா் ஆறுசாமி நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT