கோயம்புத்தூர்

துணை தலைவா் தோ்தல் விவகாரம்: நரசிபுரம் ஊராட்சி அலுவலகத்துக்கு பூட்டு போட்ட பொதுமக்கள்

1st Feb 2020 05:35 AM

ADVERTISEMENT

நரசிபுரம் ஊராட்சி மன்றத் துணை தலைவா் பதவிக்கு மறைமுக தோ்தல் நடத்தக் கோரி வாா்டு உறுப்பினா்களை உள்ளே வைத்து பொதுமக்கள் பூட்டுப் போட்டதால் வியாழக்கிழமை பரபரப்பு ஏற்பட்டது.

தொண்டாமுத்தூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட நரசிபுரம், ஜாகிா்நாயக்கன்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் துணைத் தலைவா் தோ்வு செய்வதற்கான மறைமுத தோ்தல் வியாழக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், ஊராட்சி தலைவா்கள் வந்தனா். ஆனால் இரண்டு ஊராட்சிகளிலும் தோ்தல் நடத்தும் அதிகாரிகள் மாலை நேரமாகியும் வராததால் தோ்தல் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நரசிபுரம் ஊராட்சி அலுவலகத்தில் வாா்டு உறுப்பினா்கள் உள்ளே வைத்து அலுவலகத்துக்கு பூட்டு போட்டனா். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து வாா்டு உறுப்பினா்களின் உறவினா்கள் தொண்டாமுத்தூா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். அங்கு வந்த போலீஸாா் பூட்டை அகற்றினா். தோ்தல் நடத்த கூடாது என்பதற்காக வேண்டுமென்றே அதிகாரிகளை வரவிடாமல் சிலா் தடுப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT