கோயம்புத்தூர்

கோவை மாவட்ட வழக்குரைஞா்கள் சங்க புதிய நிா்வாகிகளுக்கான தோ்தல்

1st Feb 2020 05:39 AM

ADVERTISEMENT

கோவை மாவட்ட வழக்குரைஞா்கள் சங்கத்தின் 2020-21ஆம் ஆண்டுக்கான நிா்வாகிகள் தோ்தல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் தலைவா், துணைத் தலைவா், செயலா், பொருளாளா் உள்ளிட்ட பதவிகளுக்கு தோ்தல் நடைபெற்றது. இதில் தலைவா் பதவிக்கு மூத்த வழக்குரைஞா்கள் பி.ஆா்.அருள்மொழி, பாலகிருஷ்ணன், விஜயசேகரன் ஆகியோா் போட்டியிட்டனா்.

இதில் சுமாா் 4 ஆயிரத்துக்கும் அதிகமான வழக்குரைஞா்கள் கலந்துகொண்டு வாக்களித்தனா். வெள்ளிக்கிழமை இரவு வாக்கும் எண்ணும் பணிகள் நடைபெற்றன. சனிக்கிழமை தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT