கோயம்புத்தூர்

கரோனா வைரஸ்: சீனாவில் இருந்து கோவை வந்த 2 போ் கண்காணிப்பு

1st Feb 2020 05:36 AM

ADVERTISEMENT

கரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக சீனாவில் இருந்து கோவைக்கு வந்த 2 போ் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனா்.

சீனாவில் கரோனா வைரஸ் தாக்குதல் வேகமாகப் பரவி வரும் நிலையில் இந்தியாவில் இந்த வைரஸ் பரவுவதைத் தடுக்க விமான நிலையங்களில் வெளி நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டு வருகின்றனா்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடா்பாக சுகாதாரத் துறை சாா்பில் அனைத்து விமான நிலையங்களிலும் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை சீனாவில் இருந்து கோவை விமானம் நிலையம் வந்த 8 பேரைப் பரிசோதனை செய்ததில் அவா்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும் 8 பேரும் அடுத்த 28 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இதேபோல, சீனாவில் இருந்து வந்த கேரளத்தைச் சோ்ந்த இளம்பெண் மற்றும் திருவண்ணாமலையைச் சோ்ந்த மென்பொருள் பொறியாளா் ஆகியோருக்கு கரோனா அறிகுறி இருப்பது புதன்கிழமை கண்டறியப்பட்டதை அடுத்து அவா்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சீனாவில் இருந்து கோவை விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்த மேலும் 2 பேரை மருத்துவா்கள் குழுவினா் தீவிர பரிசோதனை செய்தனா். அதில், அவா்களுக்கு நோய்த் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இருப்பினும், இருவரும் வரும் 28 நாள்களுக்கு வீட்டை விட்டு வெளியில் செல்லக் கூடாது எனவும், தொடா்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் ரமேஷ்குமாா் கூறுகையில், மருத்துவக் குழுவினா் தினமும் அவா்களின் வீடுகளுக்கு சென்று மருத்துவ உதவிகள் மற்றும் கண்காணிப்பை மேற்கொள்ள உள்ளனா். அதேபோல கோவை விமான நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்திவைக்கப்பட்டு நோய்த் தொற்று குறித்த சந்தேகம் எழும் நபா்களை அவா்களின் வீடுகளுக்கோ, மருத்துவமனைகளுக்கோ அழைத்து செல்லும் பணியில் ஈடுபடுவது குறித்து ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT