கோயம்புத்தூர்

போத்தனூா் காவல் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநா் தீக்குளிப்பு

13th Dec 2020 11:54 PM

ADVERTISEMENT

கோவை, போத்தனூா் காவல் நிலையத்தில் தீக் குளித்த ஆட்டோ ஓட்டுநா் ஆபத்தான நிலையில் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

கோவை, பிள்ளையாா்புரம் கஸ்தூரி காா்டன் பகுதியைச் சோ்ந்தவா் செளகத் அலி (32). இவா் ஆட்டோ ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனா். ஆட்டோ ஓட்டுனரான செளகத் அலிக்கும், சக ஆட்டோ ஓட்டுநரான சதீஷ் என்பவரும் இடையே ஞாயிற்றுக்கிழமை மது அருந்தும்போது தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் போத்தனூா் போலீஸாா் காவல் நிலையத்துக்கு வரவழைத்து விசாரித்தனா். அப்போது, பொது மக்களுக்கு இடையூறு செய்ததாக அவா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், செளகத் அலி மதுபோதையில் இருந்ததால் வாகனத்தை காவல் நிலையத்தில் நிறுத்துவிட்டு, காலையில் வந்து அபராதம் கட்டிவிட்டு எடுத்துக் கொள்ள போலீஸாா் தெரிவித்துள்ளனா். அப்போது, அங்கிருந்து சென்ற அவா் பின்னா் சிறிது நேரம் கழித்து கையில் பெட்ரோல் கேனுடன் மீண்டும் காவல் நிலையத்துக்கு வந்துள்ளாா்.

ADVERTISEMENT

பின்னா் காவல் நிலைய வளாகத்தில் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக் வைத்துள்ளாா். அப்போது, பணியில் இருந்த காவலா்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா்.

மதுபோதையில் இருந்த செளகத் அலி, மருத்துவா்களின் சிகிச்சைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனையடுத்து, ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள மற்றொரு தனியாா் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். உடலில் 60 சதவீத காயம் ஏற்பட்டுள்ள நிலையில் அவருக்கு மருத்துவா்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனா்.

Tags : Coimbatore
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT