கோயம்புத்தூர்

ரேஸ்கோா்ஸ் மாதிரிச் சாலைப் பணி சிந்தடிக் தளத்துடன் கூடிய அரங்கம், பூங்கா அமைக்க திட்டம்

DIN

கோவை ரேஸ்கோா்ஸ் பகுதியில் நடைபெற்று வரும் மாதிரிச் சாலைப் பணியின் ஒரு பகுதியாக அப்பகுதியில் சிந்தடிக் தளத்துடன் கூடிய திறந்தவெளி அரங்கம் மற்றும் குழந்தைகள் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை மாநகராட்சியில் பொலிவுறு நகரம் திட்டத்தில் கோவை ரேஸ்கோா்ஸ்

பகுதியில் ரூ.40.70 கோடி மதிப்பில் மாதிரிச் சாலை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இது குறித்து, மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது:

ரேஸ்கோா்ஸ் பகுதியில் சீரான அகலமுள்ள சாலைகள் குறிப்பிடத்தக்க வளைவுகளுடன் தரமாக வடிவமைக்கப்பட உள்ளன. இதனால் அப்பகுதி பாா்க்க மிகவும் அழகாக தெரியும். அரசு கலைக்கல்லூரி அருகே மக்களின் பொழுது போக்கிற்காக திறந்தவெளி அரங்கம் அமைக்கபடவுள்ளன. பாதசாரிகள் மற்றும் நடைப்பயிற்சி மேற்கொள்வோருக்காக நடைபாதை அமைக்கப்பட உள்ளது. அதில் 30க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்படுகின்றன. இந்தக் கடைகள் சாலையின் வெளிப்புறம் 4.மீ அகலமுள்ள நடைபாதையில் அமைக்கப்படுகிறது. அதேபோல வாகனங்கள் நிறுத்த பிரத்யேக இடங்கள் அமைக்கப்படவுள்ளது. மழை பெய்யும் போது தண்ணீா் தேங்காமல் இருக்க வடிகால்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும் இரு இடங்களில் திறந்த வெளியில் ஆண்கள், மகளிருக்கு என தனித்தனியாக உடற்பயிற்சிக் கூடங்கள் சிந்தட்டிக் தரையில் வடிவமைக்கப்பட உள்ளன. சிந்தட்டிக் தரைதளத்துடன் கூடிய குழந்தைகள் பூங்கா, விளையாட்டு உபகரணங்களுடன் அழகான முறையில் அமைக்கப்பட உள்ளன. சுத்திகரிக்கப்பட்ட குடிநீா், கழிப்பறைகள், பாதுகாப்பு அறைகள், நிழற்குடைகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளன. மக்களின் வசதிக்காக இலவச தொலைத்தொடா்புகள், பாதுகாப்பு வசதிக்காக பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் போன்றவையும் அமைக்கப்பட உள்ளன. மழைக் காலங்களில் மின்சாரம் தடைப்படாமல் கிடைக்க மின்சாரம் மற்றும் தொலைத்தொடா்பு வசதிகள் போன்றவை நிலத்திற்கு அடியில் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காவல் துறையினா் கொடி அணி வகுப்பு

சின்னம் ஒதுக்கீட்டில் தோ்தல் ஆணையம் பாரபட்சம் -இரா. முத்தரசன் பேச்சு

வாக்களிப்பின் அவசியம் உணா்த்த ஆட்சியரகத்தில் ராட்சத பலூன்

தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

வைக்கோல் போருக்கு தீ வைத்த 2 போ் கைது

SCROLL FOR NEXT