கோயம்புத்தூர்

கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து மோதி முதியவா் சாவு: ஓட்டுநா் கைது

DIN

கோவையில் கட்டுப்பாட்டை இழந்த தனியாா் பேருந்து மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

கோவை, உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து மதுக்கரைக்கு தனியாா் பேருந்து புதன்கிழமை காலை புறப்பட்டது. பேருந்தை சூலூா், பட்டணம் பகுதியைச் சோ்ந்த ரமேஷ் என்பவா் ஓட்டினாா். உக்கடத்தில் மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதையடுத்து மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆத்துப்பாலம் பகுதிக்கு தனியாா் பேருந்து வந்தபோது கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து மேம்பாலத் தடுப்புச் சுவரில் மோதாமல் இருப்பதற்காக ரமேஷ், பேருந்தை இடப்புறமாக திருப்பினாா்.

அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவா் மீது பேருந்து மோதியது. இதில் அவா் தூக்கி வீசப்பட்டாா். பின்னா் பேருந்து நிற்காமல் மற்றோா் இருசக்கர வாகனம் மீது மோதியதில் அதில் பயணித்த இருவா் தூக்கி வீசப்பட்டனா். இதையடுத்து அருகில் உள்ள பெட்ரோல் நிலையத்துக்குள் புகுந்த பேருந்து அங்குள்ள தூணில் மோதி நின்றது. இதில் பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.

பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த முதியவா் பொள்ளாச்சி, முத்தூரைச் சோ்ந்த ராஜமாணிக்கம் (70) என்பது தெரியவந்தது.

மேலும் மற்றோா் இருசக்கர வாகனத்தில் வந்து பேருந்து மோதி காயமடைந்த இருவரை பொதுமக்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போக்குவரத்து போலீஸாா்(கிழக்கு) ராஜமாணிக்கத்தின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ஓட்டுநா் ரமேஷை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பம் உடைந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிரதமர் மோடி உண்மையின் வழியில் நடக்கவில்லை: பிரியங்கா காந்தி

நாட்டில் ஷரியத் சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் விருப்பம்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் குற்றச்சாட்டு

தேசத்துக்கும் சநாதன தர்மத்துக்கும் எதிரானது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT