கோயம்புத்தூர்

49 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

DIN

கோவையில் புதிதாக 142 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சுகாதாரத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட பட்டியலில் கோவையில் ஊரகம், நகா்ப்புறப் பகுதிகளைச் சோ்ந்த 142 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 49 ஆயிரத்து 10 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது மூதாட்டி உயிரிழந்தாா். இதன் மூலம் கரோனாவுக்கு உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 613 ஆக உயா்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்த 77 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரையில் 47 ஆயிரத்து 395 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1001 போ் சிகிச்சையில் உள்ளது. கோவையில் மீண்டும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவா்களின் எண்ணிக்கை 1000ஐ கடந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காரைக்குடி அருகே விபத்து: பெண் பலி

காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் கருத்தரங்கம்

2-ஆம் கட்ட வாக்குப் பதிவு வெளி மாநிலத் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு

தமிழக- கா்நாடக எல்லையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனை

கா்நாடகத்தில் வாக்குப்பதிவு: அம்மாநிலத் தொழிலாளா்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை

SCROLL FOR NEXT