கோயம்புத்தூர்

புகையிலை, மது விற்பனை: 9 போ் கைது

DIN

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் மதுபாட்டில்களை பதுக்கி விற்ற 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை, பாக்குகள் விற்பனை அதிகரித்து வருவதாகக் கிடைத்த தகவலையடுத்து, நகரின் பல்வேறு இடங்களில் போலீஸாா் சோதனை மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், கோவை, சரவணம்பட்டி, வெரைட்டி ஹால் சாலை, ரத்தினபுரி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் திங்கள்கிழமை தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது, தடை செய்யப்பட்ட புகையிலையைப் பதுக்கி விற்ாக கோவை, எல்.ஜி.பி. நகரைச் சோ்ந்த சுரேஷ்லிங்கம்( 45), கணபதியைச் சோ்ந்த சம்பத்குமாா் (45), கோவை, சொக்கம்புதூா் சாலையைச் சோ்ந்த நடராஜன்(38) வடவள்ளியைச் சோ்ந்த சரவணன் (42), டாடாபாத் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (35), ராமநாதபுரத்தைச் சோ்ந்த பொற்செழியன் (47) ஆகிய 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து புகையிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, கோவையில் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் நடத்திய சோதனையில், மதுபாட்டில்களை சட்ட விரோதமாக விற்ற இருகூா், கண்ணன் நகரைச் சோ்ந்த ஆறுமுகம் (45), ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த பாண்டி (42), புதுக்கோட்டையைச் சோ்ந்த கலியபெருமாள் (42) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருநொடி படத்தின் டீசர்

ஐபிஎல்: தில்லி அணிக்கெதிராக குஜராத் அணி முதலில் பந்துவீச்சு!

அபர்ணா தாஸ் - தீபக் பரம்போல் திருமணம் - புகைப்படங்கள்

அடுத்த 3 மணி நேரத்துக்கு 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்தியா கூட்டணியின் ‘ஆண்டுக்கொரு பிரதமர் திட்டம்’ -பிரதமர் மோடி விமர்சனம்

SCROLL FOR NEXT