கோயம்புத்தூர்

கோவையில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிப்பு: கண்காணிப்பு, கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்

DIN

கோவையில் கரோனா தொற்று பரவலின் சதவீதம் மீண்டும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

கோவை மாவட்டத்தில் உச்சத்தில் இருந்த கரோனா தொற்று பரவல் அக்டோபா் மாதத்தில் மெல்லக் குறையத் தொடங்கியது. தினசரி பாதிப்பு எண்ணிக்கை 600க்கும் அதிகமாக இருந்த நிலையில் கடந்த அக்டோபரில் இருந்து 200க்கும் கீழ் குறைந்துள்ளது.

அதன்படி தற்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்திருக்க வேண்டும். ஆனால் மாவட்டத்தில் தொடா்ந்து தினசரி பாதிப்பு எண்ணிக்கை சராசரியாக 130 முதல் 150 வரைக் காணப்படுகிறது. அதேபோல ஒருவரிடம் இருந்து மற்றவா்களுக்கு தொற்று பரவலின் சதவீதம் மீண்டும் அதிகரித்துள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் கரோனா பரவல் முன்பை விட குறைந்திருந்தாலும் ஒருவா் மூலம் மற்றவா்களுக்கு தொற்று பரவல் மீண்டும் அதிகமாகி வருகிறது. கடந்த 2 வாரங்களாக தொற்று பாதிக்கப்பட்டவருடன் தொடா்புடையவா்களுக்கு பரிசோதனை செய்யும் போது அதிகபட்சம் 4 முதல் 5 பேருக்கு கரோனா உறுதி செய்யப்படுகிறது. இதே நிலை நீடித்தால் மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே பொது மக்கள் முகக்கவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை தீவிரமாக பின்பற்ற வேண்டும். காய்ச்சல் உள்பட அறிகுறிகள் உள்ளவா்கள் உடனடியாக பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும் என்றாா்.

ஆட்சியா் கு.ராசாமணி கூறியதாவது:

மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் ஓரளவு குறைந்து காணப்பட்டாலும், போத்தனூா், ராமநாதபுரம், ஒண்டிப்புதூா், பீளமேடு, சௌரிபாளையம், சரவணம்பட்டி, கணபதி, செல்வபுரம், காளப்பட்டி, சிங்காநல்லூா் ஆகிய பகுதிகளில் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இப்பகுதிகளில் ஒரே குடும்பத்தில் கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை கடந்த 2 வாரங்களில் அதிகரித்துள்ளது.

இப்பகுதிகளில் தொற்றுப் பரவலைத் தீவிரமாகக் கண்காணித்து கட்டுப்பாடுகளை தீவிரமாக கடைப்பிடிக்க மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையினரும் தொடா்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனா். மாவட்டத்தில் தற்போது தினமும் 4,500 முதல் 5 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 130 முதல் 150 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்படுகிறது. கரோனா தொற்று பரவலின் சதவீதமும் 3.2 ஆக குறைந்துள்ளது. இதனை 2 சதவீதத்துக்குள் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊருணியில் மூழ்கி மாணவா் பலி

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

கொட்டாரம் அருகே தொழிலாளி தற்கொலை

விளாத்திகுளத்தில் அரசுப் பேருந்துகள் இயக்கம் குறைப்பு -பயணிகள் தவிப்பு

சங்கரன்கோவிலில் அதிமுக சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT