கோயம்புத்தூர்

பெண் ஊராட்சித் தலைவரை பணி செய்யவிடாமல் தடுத்த விவகாரம்: விளக்கம் கேட்டு நோட்டீஸ்

26th Aug 2020 05:17 PM

ADVERTISEMENT

 

கோவை: கோவையில் பெண் ஊராட்சித் தலைவரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடா்பாக விளக்கம் கேட்டு ஆட்சியா் கு.ராசாமணிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை ஒன்றியம் ஜே.கிருஷ்ணாபுரம் ஊராட்சித் தலைவராகப் பதவி வகித்து வருபவா் சரிதா. இவா் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சோ்ந்தவா். இந்நிலையில், ஊராட்சியைச் சோ்ந்த ஆதிக்க ஜாதியினா் சிலா் ஊராட்சித் தலைவரை பணி செய்யவிடாமல் தடுப்பதாகவும், தலைவா் இருக்கையில் அமரவிடாமல் தடுத்து வருவதாகவும், தீண்டாமையுடன் நடத்தப்படுவதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் சரிதா புகாா் அளித்திருந்தாா்.

இது குறித்து நெகமம் காவல் நிலையத்தில் புகாா் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெண் ஊராட்சித் தலைவரை பணி செய்யவிடாமல் தடுத்தது தொடா்பாக விளக்கம் கேட்டு ஆட்சியா் கு.ராசாமணிக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதில், இந்தப் பிரச்னை குறித்து ஆய்வு செய்து 3 வாரங்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT