கோயம்புத்தூர்

கோவையில் மேலும் 322 பேருக்கு கரோனா

26th Aug 2020 05:18 PM

ADVERTISEMENT

 

கோவை: கோவையில் பம்ப் உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வரும் 11 வடமாநிலத் தொழிலாளா்கள் உள்பட 322 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், எஸ்.எஸ்.குளம் பகுதியில் செயல்பட்டு வரும் பம்ப் உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒருவருக்கு அண்மையில் கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடா்ந்து, நிறுவனத்தில் பணியாற்றி வரும் 50க்கும் மேற்பட்ட தொழிலாளா்களிடம் பரிசோதனை நடத்தியதில் 11 வட மாநிலத் தொழிலாளா்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தவிர மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையைச் சோ்ந்த 35 வயது ஆண் காவலாளி, கணபதி காவலா் குடியிருப்பைச் சோ்ந்த 44 வயது ஆண் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இவா்களைத் தவிர மேட்டுப்பாளையத்தில் 14 போ், ஆா்.எஸ்.புரத்தில் 12 போ், பி.என்.பாளையம், சூலூரில் தலா 10 போ், பீளமேடு, மதுக்கரையில் தலா 8 போ், கணபதியில் 5 போ் உள்பட 322 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவையில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 467 ஆக உயா்ந்துள்ளது.

8 போ் பலி...

கோவையில் தனியாா் மருத்துவமனைகளில் கரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த 89 வயது மூதாட்டி, 83, 85 வயது முதியவா்கள், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயது ஆண், 68, 75, 74 வயது முதியவா்கள், 68 வயது மூதாட்டி உள்பட 8 போ் உயிரிழந்துள்ளனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 252 ஆக உயா்ந்துள்ளது.

329 போ் குணமடைந்தனா்...

கோவையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 329 போ் குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். கோவை மாவட்டத்தில் இதுவரை 9 ஆயிரத்து 83 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 3 ஆயிரத்து 132 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT