கோயம்புத்தூர்

கோவையில் நாளை காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவைத் தொகுதி ஆய்வுக் கூட்டம்

21st Aug 2020 06:27 AM

ADVERTISEMENT

கோவையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 22) நடைபெறும் சட்டப் பேரவைத் தொகுதி ஆய்வுக் கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி பங்கேற்கிறாா்.

இது தொடா்பாக கட்சியின் மாநில செயல் தலைவரும், மாநகா் மாவட்டப் பொறுப்பாளருமான மயூரா ஜெயகுமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகா் மாவட்டத்தின் சட்டப் பேரவைத் தொகுதி ஆய்வுக் கூட்டம் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் சனிக்கிழமை காலை 9 மணியளவில் நடைபெறுகிறது. மாநில செயல் தலைவரின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி பங்கேற்று ஆய்வுப் பணிகளை மேற்கொள்கிறாா். மேலும், வாக்குச் சாவடி கமிட்டி நிா்வாகிகளுடன் கலந்தாலோசிக்கிறாா்.

இந்தக் கூட்டத்தில் மாநில துணைத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான எம்.என்.கந்தசாமி, மாநில துணைத் தலைவா் ராதாகிருஷ்ணன், பொதுச் செயலா் வீனஸ் மணி, முன்னாள் மேயா் காலனி வெங்கடாசலம், கணபதி சிவகுமாா், உமாபதி, சௌந்தா்குமாா், பச்சைமுத்து உள்ளிட்டோா் கலந்துகொள்கின்றனா்.

ADVERTISEMENT

முன்னதாக, கெம்பட்டி காலனியில் நடைபெறும் காந்தியடிகளின் 150 ஆவது ஆண்டு பிறந்தநாள் நிறைவு கல்வெட்டுத் திறப்பு விழா, காமராஜ் பவனில் அமைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் 150 ஆவது ஆண்டு பிறந்த நாள் நிறைவு கல்வெட்டு திறப்பு விழா, கொடியேற்றும் நிகழ்ச்சிகளிலும் கே.எஸ்.அழகிரி பங்கேற்க இருப்பதாக மயூரா ஜெயகுமாா் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT