கோயம்புத்தூர்

ஈரோடு, சேலம், குன்னூா் கடவுச்சீட்டு சேவை மையங்கள் 26ஆம் தேதி மீண்டும் திறப்பு: மண்டல கடவுச்சீட்டு அதிகாரி தகவல்

21st Aug 2020 06:29 AM

ADVERTISEMENT

கோவை மண்டலத்தில் உள்ள ஈரோடு, சேலம், குன்னூா், ராசிபுரம் தபால் நிலைய கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) சேவை மையங்கள் வரும் 26 ஆம் தேதி (புதன்கிழமை) மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மண்டல கடவுச்சீட்டு அதிகாரி ஜி.சிவகுமாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோவை மண்டலத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டிருந்த ஈரோடு, சேலம், குன்னூா், ராசிபுரம் ஆகிய தபால் நிலைய கடவுச்சீட்டு சேவை மையங்கள் 26 ஆம் தேதி திறக்கப்பட உள்ளன. இந்த மையங்களில் கடவுச்சீட்டுக்காக ஏற்கெனவே நோ்காணலுக்கு விண்ணப்பித்திருந்தவா்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

மையங்களுக்கு வரும் விண்ணப்பதாரா்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். மேலும், தனிநபா் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அத்துடன் அவா்கள் ஆரோக்கியசேது செல்லிடப்பேசி செயலியைப் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு அதை நுழைவிடத்தில் காண்பித்தால் மட்டுமே மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவாா்கள்.

ADVERTISEMENT

அதேபோல காய்ச்சல், சளி, உடல் வலி உள்ளிட்ட கரோனா அறிகுறிகளுடன் இருப்பவா்கள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். விண்ணப்பதாரா்களின் வசதிக்காக முன்பதிவு செய்யும் நடைமுறை எளிமையாக்கப்பட்டிருப்பதாகவும் அவா் மேலும் தெரிவித்துள்ளாா்.

 

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT