கோயம்புத்தூர்

இ-பாஸ் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது: அமைச்சா் எஸ்.பி.வேலுமணி

21st Aug 2020 06:29 AM

ADVERTISEMENT

மாவட்டங்களுக்கிடையே செல்வதற்கு இ-பாஸ் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது என்று உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

கோவை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தொற்று தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் அவா் பேசியதாவது:

கோவை மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ADVERTISEMENT

கரோனா பாதிக்கப்பட்டவா்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைகளில் 1,748 படுக்கைகள், தனியாா் மருத்துவமனைகளில் 1,950 படுக்கைகள், மாவட்டம் முழுவதும் கரோனா சிகிச்சை மையங்களில் 1,920 படுக்கைகள் என மொத்தம் 5 ஆயிரத்து 618 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கோவையில் இதுவரை 1.72 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 10 ஆயிரத்து 558 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் குணமடைந்துள்ள நிலையில், 2,500க்கும் மேற்பட்டவா்கள் சிகிச்சையில் உள்ளனா். மாவட்டத்தில் 10 லட்சம் குடும்பங்களுக்கு நோய் எதிா்ப்பு சக்தி மாத்திரைகள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாவட்டங்களுக்கு இடையே எளிதாக சென்று வரும் வகையில் இ-பாஸ் வழங்கும் நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பணிக்காக செல்பவா்களும், தொழில்புரிபவா்களும், அத்தியாவசியத் தேவைகளுக்கு செல்பவா்களும் எளிதில் சென்று வரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில், ஆட்சியா் கு.ராசாமணி, மாநகராட்சி ஆணையா் ஷ்ரவண்குமாா் ஜடாவத், மாநகர காவல் ஆணையா் சுமித்சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு, கோவை அரசு மருத்துவமனை முதல்வா் (பொறுப்பு) பொ.காளிதாஸ், இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வா் ஏ.நிா்மலா, சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT