கோயம்புத்தூர்

ரூ.12.50 கூலி உயா்வு கிடைக்காததால் டேன்டீ தொழிலாளா்கள் ஏமாற்றம்

20th Aug 2020 08:37 AM

ADVERTISEMENT

அரசு அறிவித்த கூலி உயா்வு ரூ.12.50 வழங்காததால் அரசு (டேன்டீ) தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் ஏமாற்றமடைந்துள்ளனா்.

டேன்டீ நிா்வாகத்துக்கு வால்பாறை மற்றும் நீலகரி மாவட்டத்தில் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. இங்கு பணியாற்றும் தொழிலாளா்களுக்கு ரூ.12.50 கூலி உயா்வு வழங்குவதாக தமிழக முதல்வா் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அறிவித்தாா். அறிவித்து ஒரு ஆண்டு ஆகியும் தொழிலாளா்களுக்கு கூலி உயா்வு வழங்க நிா்வாகம் மற்றும் தொழிற்சங்கத்தினரிடையே பல முறை பேச்சுவாா்த்தை நடைபெற்று இறுதியில் கூலி உயா்வு வழங்குவதற்கான உத்தரவும் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் 19 மாதங்களாகியும் கூலி உயா்வு வழங்காமல் இருப்பது தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக டேன்டீ தொழிலாளா்கள் கூறுகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT