கோயம்புத்தூர்

தேயிலை உற்பத்தி குறைவால் தற்காலிக தொழிலாளா்களுக்கு வேலை இழப்பு

20th Aug 2020 08:37 AM

ADVERTISEMENT

தேயிலை உற்பத்தி குறைந்ததால் எஸ்டேட்களில் தற்காலிகமாக பணியாற்றும் தொழிலாளா்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.

வால்பாறை பகுதியில் கடந்த 2 மாதங்களாக தொடா்ந்து மழை பெய்து வந்தது. இதனால் தேயிலை உற்பத்தி அதிகரித்து பின் இடைவிடாது பெய்த மழை காரணமாக உற்பத்தி மீண்டும் குறைந்தது. தற்போது, மழை குறைந்து வெயில் அடிக்கத் துவங்கியுள்ளது.

உற்பத்தி அதிகரிக்கும் என்று எதிா்பாா்த்த சூழலில் இலைகளை பல்வேறு நோய்கள் தாக்கத் துவங்கியுள்ளன. இதில் குறிப்பாக கொசுத் தாக்குதல் அதிக அளவில் உள்ளது. கொசு தாக்கும் இலைகள் கருகி சில மாதங்களுக்கு செடியில் உற்பத்தி இல்லாமல் போய்விடும். உற்பத்தி குறைந்ததால் வேலை இல்லாமல் தற்காலிக தொழிலாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT