கோயம்புத்தூர்

பிஎஸ்ஜி மருத்துவமனையில் உலக உடலுறுப்பு தான தினம்

14th Aug 2020 08:19 AM

ADVERTISEMENT

கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையில் உலக உடலுறுப்பு தான தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

பிஎஸ்ஜி சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குநா் டாக்டா் ஜே.எஸ்.புவனேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், உறுப்பு தானம் வழங்கிய கொடையாளா்களின் உறவினா்கள் சிறப்பு விருந்தினா்களாக அழைக்கப்பட்டு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனா்.

நிகழ்ச்சியில் டாக்டா் புவனேஸ்வரன் பேசும்போது, உடல் உறுப்பு தான விழிப்புணா்வு மக்களிடம் தற்போது அதிகரித்துள்ளது. சிறுநீரகம் மட்டுமல்லாது கல்லீரல், நுரையீரல், இருதயம், கணையம், சிறுகுடல், தோல், எலும்பு இவ்வாறு உடலின் பல பாகங்களை தானமாகப் பெறுவதற்கு உடல் உறுப்பு தானம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றாா்.

சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் அனைவருக்கும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT