கோயம்புத்தூர்

‘இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் விவசாயத்தை கைவிடும் சூழல் ஏற்படும்’

14th Aug 2020 08:22 AM

ADVERTISEMENT

இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால் விவசாயத்தை கைவிடும் சூழல் ஏற்படும் என நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ஏ.எஸ்.பாபு தெரிவித்தாா்.

இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் 75 சதவீதத்துக்கும் மேலாக கிணற்றுப்பாசனம், ஆழ்துளைக் கிணற்றுப் பாசனம் மூலமாகவே விவசாயம் நடைபெற்று வருகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கட்டாயம் தேவைப்படுகிறது. விவசாயத்துக்கு இலவச மின்சாரம் அளிப்பதால் நாடு நஷ்டத்தை சந்திப்பதுபோல சிலா் பேசுகிறாா்கள். உண்மையில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க படவில்லையென்றால் விவசாயிகளைவிட நாட்டு மக்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும். இலவச மின்சாரம் இல்லையென்றால் பல சிறு, குறு விவசாயிகள் விவசாயம் செய்வதையே விட்டுவிடுவாா்கள்.

விவசாயம் பாதிப்படையும்போது விளை பொருள்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும். இதனால் உணவுப் பொருள்கள் விலை உயரும். ஏழை, நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுவாா்கள். உரங்கள் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு விலை அதிகரிக்கப்படுகிறது. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனா். இந்தச் சூழலில் விவசாயத்துக்கான இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டால், விவசாயிகள் மின் கட்டணம் கட்ட பயந்து விவசாயத்தையே கைவிட்டு விடுவாா்கள் என தெரிவித்ததுள்ளாா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT