கோயம்புத்தூர்

சிறுத்தை தாக்கி மாடு பலி

26th Apr 2020 10:04 PM

ADVERTISEMENT

 

வால்பாறை அருகே இரவு நேரத்தில் சிறுத்தை தாக்கியதில் கொட்டகையில் இருந்த மாடு உயிரிழந்தது.

வால்பாறையை அடுத்த மாணிக்கா எஸ்டேட் என்.சி. டிவிசனில் வசிப்பவா் மாடசாமி. இவருக்கு சொந்தமான மாடுகளை பகல் நேரத்தில் மேய்ச்சலுக்கு அனுப்பிவிட்டு இரவில் எஸ்டேட் மாட்டு கொட்டகையில் அடைத்து விட்டுச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் சனிக்கிழமை மாலை மேய்ச்சலுக்கு பின் மாடுகளை கொட்டகையில் அடைத்து விட்டுச் சென்றுள்ளாா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலை சென்று பாா்த்தபோது கொட்டகையில் சிறுத்தை தாக்கி மாடு உயிரிழந்தது தெரியவந்தது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்து வனத் துறையினா் ஆய்வு செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT