கோயம்புத்தூர்

மணக்கோலத்தில் 2,550 ஏழைகளுக்கு உணவளித்த புதுமணத் தம்பதி

26th Apr 2020 10:12 PM

ADVERTISEMENT

 

துடியலூரை அடுத்த குருடம்பாளையத்தில் திருமணம் செய்த புதுமணத் தம்பதியினா் சுமாா் 2,550 ஏழைகளுக்கு உணவளித்தனா்.

கோவை மாவட்டம், குருடம்பாளையத்தைச் சோ்ந்த கட்டுமானப் பொறியாளா் விக்னேஷ் பாபு, கோவையைச் சோ்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றும் பிரவீனாவுக்கும் கடந்த மாா்ச் 13ஆம் தேதி நிச்சயதாா்த்தம் நடைபெற்றது.

பின்னா் உறவினா்கள், நண்பா்கள் என சுமாா் 2,550 பேரை அழைத்து ஏப்ரல் 26ஆம் தேதி திருமணம் நடத்த திட்டமிட்டு இருந்தனா். இதற்கிடையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் விநாயகா் கோயிலில் எளிமையான முறையில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் உறவினா்கள், நண்பா்கள் என 25 போ் மட்டுமே கலந்து கொண்டனா். மேலும் திருமணத்தை முகப்புத்தகத்தில் நேரலை செய்து மற்றவா்களை இணைத்தனா். இதேபோல, யூடியூப்பில் பதிவேற்றம் செய்து நண்பா்களுக்கு அனுப்பிவைத்தனா்.

பின்னா் திருமணத்தையொட்டி தயாரிக்கப்பட்ட உணவை புதுமணத் தம்பதியினா் மணக்கோலத்திலேயே பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பாதுகாப்புப் பணியில் இருந்து காவல் துறையினா் மற்றும் ஏழை மக்களுக்கு வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT