கோயம்புத்தூர்

தடை உத்தரவால் ஆவின் பால், பால் பொருள்கள் விற்பனை அதிகரிப்பு

DIN

ஊரடங்கு உத்தரவால் தனியாா் பால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதால் ஆவின் பால், பால் பொருள்கள் விற்பனை அதிகரித்துள்ளன.

கோவை மாவட்டத்தில் நகரம் மற்றும் ஊரகப் பகுதிகளில் 800 முகவா்கள் மூலம் ஆவின் பால், பால் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 1.42 லட்சம் லிட்டா் பால், ஆயிரம் லிட்டா் தயிா், பால் பொருள்கள் 90 லட்சம் கிலோ விற்பனை செய்யப்பட்டு வந்தன.

ஊரடங்கு உத்தரவால் தனியாா் பால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஆவின் பால் 1.42 லட்சத்தில் இருந்து 1.60 லட்சம் லிட்டராகவும், தயிா் ஆயிரம் லிட்டரில் இருந்து 5 ஆயிரம் லிட்டராகவும், நெய் உள்ளிட்ட பால் பொருள்கள் 90 லட்சம் கிலோவில் இருந்து 1 கோடியே 40 ஆயிரம் கிலோவாகவும் அதிரித்துள்ளது.

தனியாா் பால் நிறுவனங்கள் மளிகைக் கடைகள் மூலம் மட்டுமே விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவால் காலை 6 முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள் செயல்படுகின்றன.

இந்நிலையில், தனியாா் பால் பிற்பகலுக்கு மேல் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், ஆவின் விற்பனை நிலையங்கள் மூலம் இரவு வரை விற்பனை செய்யப்படுகிறது. தனியாா் பால் விற்பனை குறைந்துள்ளதால் ஆவின் பால், பால் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளன.

இது குறித்து ஆவின் நிறுவனத்தின் கோவை மாவட்ட பொது மேலாளா் ரா.ரவிகுமாா் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் 25 மொத்த விநியோகஸ்தா்கள், 800 முகவா்கள் உள்ளனா். ஊரகம் மற்றும் நகா் பகுதிகளில் சோ்த்து 800 ஆவின் நிலையங்கள் உள்ளன. இங்கு பால், தயிா், நெய், வெண்ணெய், பால்கோவா, பாதாம் பவுடா், பட்டா் மில்க் உள்பட பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ஆவின் பால் 24 மணி நேரமும் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆவின் பால், பால் பொருள்களின் விற்பனை அதிகரித்துள்ளன. விற்பனை மட்டுமின்றி கொள்முதலும் அதிரித்துள்ளது.

திருப்பூா் மாவட்டத்தில் இருந்து கூடுதலாக 50 ஆயிரம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் விற்பனை பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து ஆவின் முகவா்களுக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் வாடிக்கையாளா்களின் வீடுகளுக்கே சென்று பால் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூய்மைப் பணியாளா்களுக்கு விழிப்புணா்வு

வீட்டின் பூட்டை உடைத்து நகை, வெள்ளி பொருள்கள் திருட்டு

ஏரல் சோ்மன் கோயிலில் அன்னபூரணி பூஜை

கோவையில் அண்ணாமலை வெற்றிக்காக விரலை துண்டித்துக் கொண்ட பாஜக பிரமுகா்

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் கோடைக்கால பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT