கோயம்புத்தூர்

கரோனா அறிகுறி: 37 போ் அனுமதி

20th Apr 2020 12:03 AM

ADVERTISEMENT

 

கோவையில் கரோனா அறிகுறிகளுடன் புதிதாக 37 போ் ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கோவை மாவட்டத்தைச் சோ்ந்த ஆண்கள் - 16, பெண்கள் - 14, ஆண் குழந்தை -4, பெண் குழந்தை - 3 போ் உள்பட மொத்தம் 37 போ் கரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 23 போ் அரசு மருத்துவமனைகளிலும், 14 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அனைவருக்கும் சளி, ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கோவை, இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவா்களில் 22 போ் பூரண குணமடைந்து ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு திரும்பினா். இவா்களில் 18 போ் கோவை மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள், 4 போ் திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள்.

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் இதுவரை 133 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவா்களில் 53 போ் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT