கோயம்புத்தூர்

மருத்துவா் உடலை அடக்கம் செய்ய எதிா்ப்பு தெரிவித்தவா்கள் மீது நடவடிக்கை

20th Apr 2020 11:10 PM

ADVERTISEMENT

 

சென்னையில் கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிா்ப்பு தெரிவித்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு மருத்துவா்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து தமிழ்நாடுஅரசு மருத்துவா்கள் சங்க மாநிலச் செயலாளா் டாக்டா் ரவிசங்கா் கூறியதாவது:

கரோனா நோய்த் தொற்று நடவடிக்கையால் பெரும்பாலானவா்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட மருத்துவப் பணியாளா்கள் உயிரைப் பனையம் வைத்து பணியாற்றி வருகின்றனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்காக உயிா்த் தியாகம் செய்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் எதிா்ப்பு தெரிவித்துள்ளது வேதனைக்குரியது. உடல் மண்ணில் புதைக்கப்பட்டால் கிருமி பரவாது என்பது அறிவியல்பூா்வமான உண்மை.

அப்படியுள்ள நிலையில் இதுபோன்ற செயல் மிகவும் இழிவானது. அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற செயல் மீண்டும் நடக்காமல் இருப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மருத்துவா்கள், மருத்துவமனைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்துக்கு ரூ.2 கோடி நிதி வழங்க வேண்டும். தவிர அனைத்து மருத்துவா்களுக்கும் தலா ரூ.1 கோடியில் மருத்துவக் காப்பீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT